மேலும் செய்திகள்
தி.மு.க., அரசை கண்டித்து பா.ம.க., ஆர்ப்பாட்டம்
21-Jul-2025
காரைக்குடி, ; காரைக்குடியில் பா.ஜ., சார்பில் நடந்த கண்டன கூட்டத்தில் காங்., பேனரை காட்டி காங்., எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் பதவி விலகுவீர்களா என கேள்வி எழுப்பினர். காரைக்குடி மாநகராட்சியில் மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் என்று கூறி கேலி கூத்தாக்கிய தி.மு.க., காங்., கவுன்சிலர்களை கண்டித்தும் மேயர் முத்துத்துரை மற்றும் துணை மேயர் குணசேகரனை கண்டித்தும் பா.ஜ., சார்பில் கண்டன கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் பாண்டித்துரை, முன்னாள் பொதுச் செயலாளர் நாகராஜன், மாவட்ட பொதுச் செயலாளர் கணேசன், மாநில பட்டியல் அணி துணைத்தலைவர் ஆதீனம், மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில், மாவட்ட தலைவர் பாண்டித்துரை காங்., பேனரை காட்டி பேசினார். அதில், தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளையும், பா.ஜ., அரசின் சூழ்ச்சிகளையும் கண்டித்து பதவி விலகு என்ற முழக்கத்துடன் காங்., மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடத்துகிறது. வாக்கு திருடப்பட்டது என்றால், கார்த்தி எம்.பி., மாங்குடி, எம்.எல்.ஏ., எப்படி வெற்றி பெற்றனர். தி.மு.க., கூட்டணி எப்படி ஆட்சியைப் பிடித்தது. அனைவரும் பதவி விலகுவீர்களா. மீண்டும் தேர்தல் வைக்கலாமா என கேள்வி எழுப்பினார்.
21-Jul-2025