உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அமல்படுத்தப்படுமா விவசாயம் செழிக்க நுாறு நாள் திட்டத்தில் மாற்றம் கேரளாவைப் போல் தமிழகத்திலும் திட்டம்

அமல்படுத்தப்படுமா விவசாயம் செழிக்க நுாறு நாள் திட்டத்தில் மாற்றம் கேரளாவைப் போல் தமிழகத்திலும் திட்டம்

திருப்புவனம்: கேரளாவைப் போல தமிழகத்திலும் 100 நாள் திட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தி விவசாயம் செழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை நம்பி நெல் விவசாயம் நடைபெறுகிறது.விவசாயத்தில் என்னதான் இயந்திரங்கள் வந்தாலும் கூலி ஆட்கள் மூலம் விவசாயம் செய்தால் தான் முழு விளைச்சல் கிடைக்கும், நெல் விவசாயத்தில் வரப்பு வெட்டுதல், நாற்றங்கால் அமைத்தல், நாற்று பறித்தல்,நடவு செய்தல்,களை எடுத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் விவசாய கூலி ஆட்கள் தேவை.விவசாய பணிகள் காலை எட்டு மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும் தான் நடைபெறும். வேலைக்கு ஏற்ப 400 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை கூலி வழங்கப்படுகிறது. இது தவிர ஒரு சில இடங்களில் ஏக்கருக்கு இரண்டாயிரம் ரூபாய் என கூலி நிர்ணயம் செய்தும் ஒப்பந்த அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இது தவிர கூலி ஆட்களுக்கு இரண்டு முறை டீ, வடை உள்ளிட்ட சிற்றுண்டிகளும் வழங்க வேண்டும்.ஆனாலும் விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என விவசாயிகள் புலம்புகின்றனர்.விவசாயி இளங்கோ கூறுகையில்:கேரளாவில் அந்தந்த ஊராட்சிகளில் விவசாயிகள் தங்களது நிலத்தின் பரப்பளவு என்ன வேலைக்கு ஆட்கள் தேவை என பதிவு செய்து விட வேண்டும்.100 நாள் திட்ட பணியாளர்களை அந்தந்த ஊராட்சியே விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப பிரித்து அனுப்பி விடுவார்கள், விவசாயிகளுக்கும் செலவு குறையும். பணிகளும் விரைவாக நடந்து விடும். அதே போல தமிழகத்திலும் 100 நாள் திட்ட பணியாளர்களை கொண்டு அனைத்து விவசாய பணிகளும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.முல்லைப்பெரியாறு வைகை பூர்வீக பாசன சங்க பொதுச்செயலாளர் ஆதிமூலம் கூறுகையில் : சிவகங்கை மாவட்டத்தில் மூன்று லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இதில் ஒன்றரை லட்சம் ஏக்கரில் நெல் நடவு பணிகள் நடைபெறுகின்றன. தற்போது வரை 60 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி நடந்து வருகிறது. நெல் நடவு பணிகள் தொடங்கி அறுவடை வரை ஆகஸ்டில் தொடங்கி பிப்ரவரி வரை 100 நாள் திட்ட பணிகளை நிறுத்த வேண்டும் அல்லது கேரள மாநிலம் போல 100 நாள் திட்ட பணியாளர்களை வைத்து களை எடுத்தல், வரப்பு வெட்டுதல், மருந்து தெளித்தல்,தண்ணீர் பாய்ச்சுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.100 நாள் திட்டத்தின் கீழ் சம்பளம் வழங்கப்படுவதால் விவசாயிகளுக்கு செலவு குறையும். ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்யும் இடத்தில் 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவு செய்ய வேண்டி இருக்கும், இதனால் கூடுதல் பரப்பளவில் விவசாயம் நடைபெறும். விவசாயம் லாபகரமான தொழிலாக இல்லாத நிலையில் விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டு வரும் நிலையில் இது போல மாற்றங்களை ஏற்படுத்தினால் விவசாயம் செழிக்கும்.நெல் விவசாயம் மட்டுமல்லாது வாழை,தென்னை, கரும்பு,வெற்றிலை உள்ளிட்ட விவசாயத்திலும் 100 நாள் திட்ட பணியாளர்களை கேரளா போல பயன்படுத்தலாம். தமிழக அரசு கேரளாவிற்கு ஒரு குழுவை அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும்.100 நாள் திட்டத்தில் வேண்டிய மாற்றங்கள் செய்து விவசாயம் செழிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Minimole P C
நவ 28, 2024 08:15

Kerala is always pioneer in many things. They introduced ombudsman control over local administration in 1996. Accordingly a committee headed by a retired HC judge and other two non political members. This committee will have judicial power and enquire all the complaints from peon to minister and punish if the complaint is found true. Because of this corruption in local bodies in Kerala is the lowest in the whole India. Following the this many states introduced the same tem in their states to check the corruption. TN is the last state to introduce the same on 2018 after much perusation by GOI as it went to the extent of stoping its grands. Even then TN introduced a toothless committee headed by a retired IAS officer who is well known for his malpractices when he was in office. Therefore TN is first in corruption in local body administration.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை