புத்துயிர் பெறுமா பிரான்மலை புது ஊருணி
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சீரமைக்கப்பட்ட குடிநீர் ஊருணி பராமரிப்பு இல்லாமல் மீண்டும் பாழாகி வருகிறது. இவ்வொன்றியத்தில் பிரான்மலை ஊராட்சி வேங்கைப்பட்டி ரோட்டில் உள்ள புது ஊருணி சுற்றுவட்டாரத்தின் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரங்களில் ஒன்றான உள்ளது. இவ்வூருணி பாழடைந்ததை தொடர்ந்து கடந்தாண்டு ரூ.14 லட்சம் செலவில் மராமத்து செய்யப்பட்டு தண்ணீர் தேங்க வசதியாக தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. தற்போது ஊருணியின் உள்ளேயும், சுற்றிலும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து தடுப்புச்சுவர் சேதமடைந்து வருகிறது. புதர்களை அகற்றி நான்கு புறமும் பேவர்பிளாக் நடைபாதை அமைத்தால் அப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், ஊருணியும் புத்துயிர் பெற்று தண்ணீரை தேக்கிவைக்க உதவும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.