19 பவுன் நகை மோசடி காளையார்கோவில் பெண் கைது
சிவகங்கை: காளையார்கோவிலில் நண்பரிடம் 19 பவுன் தங்க நகை மோசடி செய்த பெண்னை போலீசார் கைது செய்தனர்.சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் திருநகரைச் சேர்ந்தவர் மனோகரன் மனைவி மகேஸ்வரி 38. அதே பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி கலைமதி 38. இருவரும் நண்பர்கள். கலைமதி நேற்று முன்தினம் உறவினர் ஒருவர் திருமணத்திற்கு செல்வதற்காக 19 அரை பவுன் தங்க நகையை மகேஸ்வரியிடம் வாங்கியுள்ளார். மகேஸ்வரி அந்த நகையை திருப்பி கேட்ட போது கலைமதி அசிங்கமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.மகேஸ்வரி காளையார்கோவில் போலீசில் புகார் அளித்தார். போலீசார் கலைமதியை கைது செய்தனர்.