உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடியில் காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்

காரைக்குடியில் காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஆவுடைபொய்கை பகுதியில் காரில் இறந்து கிடந்த பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். காரைக்குடி மருதுபாண்டியர்நகரைச் சேர்ந்த பாண்டியன் மனைவி மகேஷ்வரி 38. கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். இரு மகள்கள் உள்ளனர். இவர் நேற்று காலை 8:00 மணிக்கு வீட்டிலிருந்து காரில் புறப்பட்டு சென்றார். நீண்ட நேரமாகியும் மகேஷ்வரி வீட்டிற்கு வராததால் உறவினர்கள் தேடினர். மகேஷ்வரி அலைபேசியில் இருந்து உறவினர்களுக்கு லொக்கேஷன் ஷேர் செய்யப்பட்டிருந்தது. உறவினர்கள் லொக்கேஷன் பகுதியான ஆவுடைபொய்கை சாய்பாபா நகர் பகுதிக்கு சென்று பார்த்தனர். அங்கு காரில் இறந்த நிலையில் மகேஷ்வரி கிடந்துள்ளார். அவர் அணிந்திருந்த நகைகள் திருடு போயிருந்தன. உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை