உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பெண்ணை அரிவாளால் தாக்கி கொல்ல முயற்சி பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை 

பெண்ணை அரிவாளால் தாக்கி கொல்ல முயற்சி பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை 

சிவகங்கை: மானாமதுரையில் வாய் பேச முடியாத பெண்ணை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட பாண்டியம்மாளுக்கு 65, 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை மகிளா நீதி மன்றம் தீர்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பூக்கார தெரு பார்வதி 70. இவரால் பேச முடியாது. அப்பகுதியில் ஓட்டு வீடு ஒன்றில் வாடகைக்கு குடியிருந்தார். முதியோர் பென்ஷன் பெற்றும், பழைய பொருட்களை சேகரித்து விற்பதன் மூலம் வருவாய் ஈட்டி வந்தார். இவரது வீட்டிற்கு அருகே ராமராஜன் மனைவி பாண்டியம்மாள் 65, வசித்தார். பார்வதி சேகரிக்கும் பழைய பொருட்களை வீட்டிற்கு முன் போடுவதாக அடிக்கடி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 2021 ஜூலை 9ம் தேதி அதிகாலை 5:30 மணிக்கு, பாண்டியம்மாள் வீட்டு வாசலை சுத்தம் செய்யும் போது, பார்வதிக்கு சொந்தமான பழைய பொருட்கள் கிடப்பதாக கூறி தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமுற்ற பாண்டியம்மாள் அரிவாளால், பார்வதியை வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டார். மானாமதுரை போலீசார் பாண்டியம்மாளை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை மகிளா நீதிமன்ற நீதிபதி கோகுல் முருகன் முன் விசாரணைக்கு வந்தது. கொலைமுயற்சி செய்த பாண்டியம்மாளுக்கு 5 ஆண்டு சிறை, ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !