உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  ஓடும் பஸ்சில் குழந்தையுடன் பணம் திருடிய பெண்கள்

 ஓடும் பஸ்சில் குழந்தையுடன் பணம் திருடிய பெண்கள்

திருப்புவனம்: மதுரையில் இருந்து கமுதி சென்ற தனியார் பஸ்சில் நேற்று 3 லட்ச ரூபாயை திருட முயன்ற இரு பெண்களை பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மதுரையை சேர்ந்தவர் ஆனந்தி 45. திருப்புவனத்தில் நகை கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் மதுரை அண்ணா நகரில் தனியார் வங்கியில் இருந்து இரண்டு லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை எடுத்து கைப்பையில் வைத்து மதுரை ரிங் ரோட்டில் திருப்புவனம் செல்வதற்காக தனியார் பஸ்சில் ஏறினார். காலுக்கு அடியில் கைப்பையை வைத்து பயணம் செய்துள்ளார். பஸ்சில் இவருக்கு அருகே கைக்குழந்தையுடன் இரண்டு பெண்கள் நின்றுள்ளனர். அதில் ஒரு பெண் மட்டும் ஆனந்தியின் அருகே அமர்ந்து பெண் குழந்தையை கீழே இறக்கி விட்டு துாக்கும் போது நைசாக கைப்பையில் இருந்த பணத்தில் ஒரு 500 ரூபாய் கட்டை எடுத்துள்ளார். அப்போது மற்றொரு கட்டிலிருந்த பணம் பிரிந்து கீழே விழுந்துள்ளது. பக்கத்து இருக்கையில் இருந்த பயணிகள் கவனித்து ஆனந்தியை எச்சரித்துள்ளனர். உடனடியாக இரண்டு பெண்களையும் திருப்புவனம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் சேலத்தைச் சேர்ந்த ரேவதி 40, வசந்தி 43, என தெரியவந்தது. ஆனந்தியின் கைப்பையில் இரண்டு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் இருந்த நிலையில் 64 ஆயிரத்து 500 ரூபாய் மட்டும் மாயமாகி உள்ளது. திருப்புவனம் போலீசார் இரண்டு பெண்களிடமும் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ