உள்ளூர் செய்திகள்

தொழிலாளி பலி

தேவகோட்டை: தேவகோட்டை அருகே கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராஜ்குமார் 23. தந்தை கடந்த ஆண்டு இறந்த நிலையில் ராஜ்குமாரும் அவரது தாயார் மீனாளும் கட்டட வேலை செய்து வருகின்றனர். நேற்று காலை தேவகோட்டை ராம்நகர் வீட்டில் கட்டட வேலைக்கு ராஜ்குமார் சென்றார். அலைபேசிக்கு சார்ஜ் ஏற்ற வயரை இணைக்கும் போது ராஜ்குமார் உடலில் மின்சாரம் தாக்கி பலியானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !