உள்ளூர் செய்திகள்

தொழிலாளி படுகொலை

மானாமதுரை:மானாமதுரை அருகே மைக் செட் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள அன்னவாசல் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் காளீஸ்வரன், 20, மைக் செட் அமைக்கும் வேலை பார்த்து வருகிறார். சங்கமங்கலம் கிராமத்தில் செல்வம் என்பவரது புதிய வீட்டில் இன்று நடைபெறும் புதுமனை புகுவிழாவிற்காக மைக் செட் போடும் பணியில் நேற்று ஈடுபட்டு இருந்தார். அப்போது, மூன்று டூ -- வீலர்களில் வந்த 8க்கும் மேற்பட்டோர் காளீஸ்வரனை வெட்டினர். இதில், படுகாயமடைந்த அவர் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றபோது பலியானார். ஆள் மாறாட்டத்தில் அவரை கும்பல் கொன்றதாக காளீஸ்வரனின் உறவினர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை