மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : உலக தபால் தினம்
09-Oct-2024
சிவகங்கை : சிவகங்கையில் தேசிய தபால் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தபால் துறை சிவகங்கை கோட்ட கண்காணிப்பாளர் மாரியப்பன் துவக்கி வைத்தார். தலைமை தபால் நிலையத்தில் ஊர்வலம் துவங்கி, அரண்மனைவாசல் வரை சென்றது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. உதவி கோட்ட கண்காணிப்பாளர் வெங்கடேசன், தலைமை தபால் அதிகாரி வீரபாண்டியன், தர்மாம்பாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உப கோட்ட ஆய்வாளர் போற்றிராஜா நன்றி கூறினார்.* திருப்புத்துார் ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக தபால் தினம் கொண்டாடப்பட்டது. தபால்கள் துவக்கப்பட்ட காலம், கடந்த நுாற்றாண்டில் அதன் பயன்பாடு, தற்போது தபால்கள் பயன்படுத்தப்படுவது குறித்து மாணவர்களுக்கு முதல்வர் அமுதா, துணை முதல்வர் அருள் சேவியர் அந்தோணி ராஜ் ஆகியோர் விளக்கினர். தபால் தலை சேகரிப்பது குறித்தும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.ஒருங்கிணைப்பாளர் சபிதா பானு நன்றி கூறினார்.
09-Oct-2024