மேலும் செய்திகள்
தென்னைகளை காப்பாற்ற வரமாய் வந்தது மாமழை
13-Oct-2025
திருப்புவனம்: திருப்புவனத்தில் உள்ள தென்னை மரங்களில் மர நாய்கள் இளநீர் காய்களை சேதப்படுத்தி வரும் நிலையில் தற்போது தேங்காய்களையும் வேட்டையாடுவதாக விவசாயிகள் புலம்புகின்றனர். திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் நெல், வாழைக்கு அடுத்தபடியாக தென்னை விவசாயம் செய்யப்படுகிறது. வைகை ஆற்றின் இருபுறமும் விவசாயிகள் பலரும் பம்ப்செட் மூலம் கிணற்று பாசனம் மூலம் பல ஆண்டுகளாக தென்னை மரங்களை வளர்த்து வருகின்றனர். திருப்புவனம் தாலுகாவில் மட்டும் சுமார் மூன்று லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. தென்னை மரங்களில் இருந்து 45 முதல் 60 நாட்களுக்கு ஒரு முறை தேங்காய் வெட்டப்படுகிறது. ஒரு மரத்திற்கு சராசரியாக 30 தேங்காய் வரை கிடைக்கும். சமீபகாலமாக தேங்காய்களின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடும் கோடை வெயில் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தண்ணீர் தேடி தென்னந்தோப்புகளில் குடிபுகும் மர நாய்கள் தேங்காய்களில் துளையிட்டு தண்ணீரை உறிஞ்சி விடுகின்றன. மரநாய்கள் ஒரு மரத்தில் ஏறினால் அனைத்து தேங்காய்களிலும் தண்ணீரை உறிஞ்சிய பின் தான் அடுத்த மரத்திற்கு செல்லும். அணில், காட்டு எலி உள்ளிட்டவைகளும் தேங்காய்களில் துளையிட்டு தண்ணீரை உறிஞ்சி விடுகின்றன. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. 30 காய்கள் விளைந்த இடத்தில் வெறும் பத்து காய்கள் மட்டுமே கிடைப்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். விவசாயிகள் கூறுகையில் : கோடை காலத்தில் விளைச்சல் பாதிப்பு இருக்கும். திருப்புவனம் வட்டாரத்தில் போதிய மழை இல்லாததால் தண்ணீர் தேடி மர நாய்கள் மரத்தில் பதுங்கி விடுகின்றன. குரும்பைகளை வேட்டையாடும் மர நாய்கள் தற்போது முற்றிய தேங்காய்களையும் துளை போட்டு தண்ணீரை உறிஞ்சி விடுகின்றன.இதனால் தேங்காய்கள் காய்ந்து உதிர்ந்து விடுகின்றன. ஒரு மரத்தில் தேங்காய்கள் அனைத்தையும் சேதப்படுத்திய பின்தான் இறங்குகின்றன. மரநாய் மேலே இருப்பதை கண்டறியவே முடியாது, மழை பெய்தால் மட்டுமே இதற்கு ஓரளவு தீர்வு காண முடியும், என்றனர்.
13-Oct-2025