மேலும் செய்திகள்
முற்போக்கு எழுத்தாளர் சங்க ஆலோசனை கூட்டம்
22-Jul-2025
மானாமதுரை: மானாமதுரையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க மாநாடு நடந்தது. தலைவர் தேவதாஸ் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பாலமுருகன், பொன்னையா, சோமசுந்தரபாரதி முன்னிலை வகித்தனர். அழகுமுருகன் வரவேற்றார். கிளை செயலாளர் ரசீந்திரகுமார் அறிக்கை வாசித்தார். நகராட்சி துணை தலைவர் பாலசுந்தரம், பேச்சாளர் திருமாவளவன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் பரமாத்மா வாழ்த்துரை வழங்கினர். மானாமதுரையில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி துவக்க வேண்டும். அரசு மகளிர் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். சபரிராஜன் நன்றி கூறினார்.
22-Jul-2025