பள்ளிகளில் யோகா தின விழா
சிவகங்கை: நாட்டரசன்கோட்டை கே.எம்.எஸ்.சி., மகளிர் மேல்நிலை பள்ளியில் யோகா தின விழா நடைபெற்றது.சிவகங்கை மனவளக்கலை மன்ற பேராசிரியர் மகேஸ்வரன் தலைமை வகித்தார். மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. பள்ளி செயலர் நாகராஜன், தலைமை ஆசிரியை (பொறுப்பு) ஆரோக்கியஸ்டெல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கீழச்சிவல்பட்டி: கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளியில் யோகா தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு யோகா செயல் விளக்கம் பயிற்சியளிக்கப்பட்டது. தலைமையாசிரியர்கமலம் தலைமை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர்கள் வாசு, மூர்த்தி, அழகு மீனாள், ஆகியோர் யோகப் பயிற்சிக்கான செயல் விளக்கம் அளித்தனர். மாணவர்களுக்கு மனவளக்கலை யோகா மற்றும் பாரம்பரிய யோகா போன்றவை கற்றுத் தரப்பட்டது. என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் வீரபத்திரன்நன்றி கூறினார்.