உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வீரதீர சிறுமி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

வீரதீர சிறுமி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை: தேசிய பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு வீரதீர செயல் புரிந்த 18 வயதிற்குட்பட்ட சிறுமிகளுக்கு விருது, ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது. இந்த விருது பெற நவ., 29 க்குள் சிவகங்கை சமூக நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். அடுத்த ஆண்டு ஜன., 24 அன்று தேசிய பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு, சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், வயது 18 வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், குழந்தை தொழிலாளர் முறை ஒழிக்கவும், குழந்தை திருமணம் தடுக்கும் முயற்சியில் இறங்கிய 18 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளுக்கு விருது, ரூ.1 லட்சம் பரிசும் வழங்கப்படும். இந்த விருது பெற வயது 13 முதல் 18 க்குள் இருத்தல் வேண்டும். இந்த விருதினை பெற சிறுமிகள் கருத்துருவினை https://awards.tn.gov.inஇணையதளத்தில் பதிவு செய்து, அக்கருத்துக்களை தமிழ், ஆங்கிலத்தில் தலா 2 நகல் எடுத்து, சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் நவ., 29 மாலை 5:00 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும், என சமூக நலத்துறை அலுவலர் ரதிதேவி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !