போதையில் வாகனங்களை இயக்கும் இளைஞர்கள்: அச்சத்தில் மக்கள்
சிவகங்கை ': சிவகங்கை நகரில் இளைஞர்கள் சிலர் போதையில் டூவீலரில் வேகமாக செல்வதால் விபத்து அச்சத்தில் சாலையில் பயணிக்க வேண்டியதிருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். சிவகங்கை நகரில் இளைஞர்கள் சிலர் ரீல்ஸ் மோகத்தில் வாகனங்களை ஓட்டுகின்றனர். சாலையில் குறுக்கு நெடுக்காகவும் வீலிங் செய்கின்றனர். இதில் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி டூவீலர் ஓட்டி அலைபேசியில் படம் எடுக்கின்றனர். இவ்வாறு சாலையில் செல்லும் போது எதிரே வரக்கூடியவர்கள் விபத்து அச்சத்தில் செல்கின்றனர். இரவு நேரத்தில் ஒரு சில இளைஞர்கள் மதுரை ரோடு, கல்லுாரி சாலை, மருத்துவக் கல்லுாரி ரோட்டில் போதையில் இவ்வாறு ஈடுபடுகின்றனர். இவர்களை ரோந்து போலீசார் கண்காணிக்க வேண்டும். காலை மாலை நேரங்களில் கல்லுாரி சாலை, மஜித்ரோடு, கலெக்டர் அலுவலக வளாகம், மகளிர் கல்லுாரி ரோடு உள்ளிட்ட பகுதியில் மாணவர்கள் மூன்று முதல் நான்கு பேர் வரை ஒரே வாகனத்தில் பயணிக்கின்றனர். அவர்கள் மெதுவாகவும் செல்வதில்லை. சில வாகனங்களில் வித்தியாசமான ஒலி எழுப்புவதால் சக வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் சூழல் உள்ளது. போதையில் ரீல்ஸ் மோகத்தில் செயல்படும் இளைஞர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.