உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / செயின் பறித்த இளைஞர் கைது

செயின் பறித்த இளைஞர் கைது

காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூரை சேர்ந்தவர் உமையாள் 70. இவர் பஸ் ஸ்டாப்பில் பஸ்சுக்காக நின்றார். அவ்வழியாக வந்த இளைஞர் மூதாட்டியை பைக்கில் அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார். பள்ளத்துார் மணச்சை அருகே சென்றபோது பைக்கை வடகுடி சாலையில் நிறுத்தி மூதாட்டி அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க செயினை இளைஞர் பறித்து சென்றார். மூதாட்டி பள்ளத்துார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சிசிடிவி., காட்சிகளின் அடிப்படையில் செயினை பறித்துச் சென்ற, அறந்தாங்கி பத்தரசர்கோட்டை கம்மங்காடு ராமலிங்கம் மகன் தர்மராஜ் 22 என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை