உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் இளைஞர் கொலை : 8 பேரை கைது செய்து விசாரணை

சிவகங்கையில் இளைஞர் கொலை : 8 பேரை கைது செய்து விசாரணை

சிவகங்கை: சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாக்யராஜ் மகன் ராஜேஷ் 19. இவர் நவ., 1 இரவு 10:15 மணிக்கு சென்னை செல்ல சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் நின்றார். அவரை டூவீலரில் வந்த 8 பேர் வாளால் வெட்டி கொலை செய்தனர். ராஜேஷின் தாய் சரஸ்வதி போலீசில் தொண்டி ரோடு அருண்பாண்டி தலைமையிலான கும்பல் கொலை செய்ததாக புகார் அளித்தார். எஸ்.பி., சிவபிரசாத், டி.எஸ்.பி., அமலஅட்வின், இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையில் தனிப்படையை அமைத்தார். தனிப்படை போலீசார் நேற்று தொண்டிரோடு மதியழகன் மகன் அருண்பாண்டி 24, சோழபுரம் காளீஸ்வரன் மகன் அய்யப்பன் 21, முத்துராமன் மகன் விஜய் 20, சக்கந்தி மில்கேட் முருகவேல் மகன் கதிர்வேல் 19, பழைய கோர்ட் வாசல் ராஜேந்திரன் மகன் குணா 19, திருவள்ளுவர் தெரு குமார் மகன் சரவணன் 19, முதலியார் தெரு ராஜேந்திரன் மகன் தண்டீஸ்வரன் 19, வாணியங்குடி ராமச்சந்திரன் மகன் நள்ளமணி 22, ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ