உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / திருநங்கையாக மாற ஆணுறுப்பு நறுக் கொலையில் முடிந்த சுய ஆப்பரேஷனால் இருவர் கைது

திருநங்கையாக மாற ஆணுறுப்பு நறுக் கொலையில் முடிந்த சுய ஆப்பரேஷனால் இருவர் கைது

தென்காசி:ஆலங்குளம் அருகே திருநங்கையாக மாற்ற ஆணுறுப்பை அறுத்தபோது ஒருவர் இறந்தார். இதுதொடர்பாக இரு திருநங்கையரை போலீசார் கைது செய்தனர்.தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே குத்தப்பாஞ்சான் ஊராட்சி பறும்பு நகரில், 15 திருநங்கையர்கள் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். நேற்று காலை, அங்கு ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடம், பறும்பு நகர் கடையம் போலீஸ் சரகத்திற்குட்பட்டதால் அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமீதா சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். இறந்தது, துாத்துக்குடி மாவட்டம், அரசர்குளத்தைச் சேர்ந்த சிவாஜிகணேஷ், 35, என, தெரியவந்தது.அவர் மனதளவில் திருநங்கையாக மாறியதால், பறும்பு நகர் திருநங்கை மகாலட்சுமியுடன் இணைந்து வசித்தார். பெயரையும் ஷைலு என, மாற்றிக் கொண்டார். அவரது ஆணுறுப்பை நேற்று முன்தினம் இரவு, வீட்டில் வைத்து சக திருநங்கையர் கத்தியால் நறுக்கினர். அப்போது, அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்கு அவரை அழைத்துச் செல்லாததால், அங்கேயே இறந்துள்ளார். திருநங்கையர் மகாலட்சுமி, மதுமிதா கைது செய்யப்பட்டனர். சிவாஜிகணேஷ் உடல் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.திருநங்கை மற்றும் திருநம்பிகளாக மாறுவோருக்கு அரசு மருத்துவமனைகளில் இத்தகைய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.ஜி.ஹெச்.,சில் அறுவை சிகிச்சைதிருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டீன் ரேவதி பாலன் கூறியதாவது:உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி பிரிவில் செய்யப்படுகிறது. இத்தகைய ஆப்பரேஷன்களை மேற்கொள்வோரின் பெயர், விபரம் தகவல்கள் ரகசியம் காக்கப்படுகிறது. இதற்காக, அவர்களுக்கு எந்த செலவும் கிடையாது. எனவே, இத்தகைய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு இல்லாததால், சுயமாக விபரீத செயல்களில் ஈடுபட்டு, இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ