உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / பள்ளிக்குச் சென்ற 2 மாணவர்கள் மாயம்

பள்ளிக்குச் சென்ற 2 மாணவர்கள் மாயம்

தென்காசி: தென்காசி மாவட்டம் புளியங்குடி கீழப்பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முகமது மகன் தல்கா 11, சுரண்டையைச் சேர்ந்த முகமது அலி மகன் அப்துல் தமீம் 14. இருவரும் புளியங்குடியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கின்றனர். நேற்று (நவ.,18) காலை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற இருவரும், சிந்தாமணி பகுதியில் பள்ளிச் சீருடையுடன் நின்றுள்ளனர். அப்பகுதியினர் விசாரித்து பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காலை 11:00 மணிக்கு இடைவேளையின்போது பள்ளியிலிருந்து வெளியே சென்ற இருவரும் மீண்டும் வகுப்புக்கு திரும்பவில்லை. இதுகுறித்து பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தது. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் பெற்றோர் புளியங்குடி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர்களைத் தேடினர். 6ம் வகுப்பு மாணவன் தல்காவை உறவினர்கள் மீட்டனர். அப்துல் தமீம் குறித்து தகவல் இல்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை