மேலும் செய்திகள்
குற்றாலத்தில் வெள்ளம்
20-Jul-2025
தென்காசி:பழைய குற்றாலம் அருகே ஆட்டோ மீது வேன் மோதிய விபத்தில், சென்னை தம்பதி பலியாகினர். தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் தற்போது சீசன் நிலவுகிறது. சென்னை, பிராட்வேயை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் குற்றாலம் வந்திருந்தனர். நேற்று காலை குற்றாலத்தில் இருந்து ஆட்டோவில் பழைய குற்றாலம் அருவிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிரே சுற்றுலா பயணியரை ஏற்றி வந்த வேன் ஆட்டோ மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில், ஆட்டோவில் இருந்த சென்னை, மண்ணடியை சேர்ந்த ஷேக் அலாவுதீன், 60, அவரது மனைவி யாஸ்மின், 54, பலியாகினர். ரோஸ்பானு, 50, சாஜிதா, 52, உள்ளிட்டோர் காயமுற்றனர். வேன் கவிழ்ந்ததில் அதில் பயணித்த துாத்துக்குடி மாவட்டம், குளத்துாரைச் சேர்ந்த நான்கு பேர் காயமுற்றனர். தென்காசியில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ், மடத்துார் விலக்கு அருகே சென்றபோது, எதிரே வந்த கார் மீது மோதியது. இதில், காரில் இருந்த சென்னையை சேர்ந்த பச்சையப்பன், 60, பலியானார். குற்றாலம் அருகே நன்னகரத்தில், மேலகரத்தை சேர்ந்த ராம்குமார், 25, என்ற வாலிபர், டூ - வீலரில் சென்றபோது, வேன் மோதி பலியானார்.
20-Jul-2025