உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / மனிதன் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு மனிதனை விட ஒரு போதும் பெரியதல்ல * ஷோஹோ தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு தகவல்

மனிதன் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு மனிதனை விட ஒரு போதும் பெரியதல்ல * ஷோஹோ தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு தகவல்

தென்காசி:பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களை தொழில் முனைவோராக மாற்றும் முதல் கிராமப்புற இ-காமர்ஸ் தளமான 'கொற்றவை'யை ஷோஹோ தலைவர் ஸ்ரீதர்வேம்பு துவக்கி வைத்தார்.தஞ்சாவூரை பூர்வீகமாக கொண்ட ஷோஹோ நிறுவன தலைவர் ஸ்ரீதர் வேம்பு, தென்காசி மாவட்டம் கடையம் அருகே கோவிந்த பேரியில் வசிக்கிறார். தென்காசி மத்தளம்பாறையில் ஐ.டி., நிறுவனம் நடத்தி வருகிறார். கடையம் அருகே கோவிந்தபேரியில் உள்ள கலைவாணி கல்வி நிலையத்தில் நேற்று நடந்த நிகழ்வில் கொற்றவை எனும் இ-காமர்ஸ் அமைப்பை துவக்கி வைத்தார். பீடி சுற்றுவது உள்ளிட்ட ஆபத்தான சிறு தொழில்களில் ஈடுபடும் தென் மாவட்ட பெண்களை சிறு பொருள்களை உற்பத்தி செய்ய செய்யும் தொழில் முனைவோராக மாற்றும் திட்டத்தை துவக்கி வைத்தார்.“கொற்றவை வெறும் ஒரு தளமல்ல; இது ஒரு இயக்கம். கிராமப்புற பெண்களின் கைவினைப்பொருட்களை அவர்கள் பெயரிலேயே உலகம் முழுவதும் கொண்டு செல்லும் திட்டமாகும்என்றார் கொற்றவை நிறுவனர் காருண்யா , வாய்ஸ் ஆப் தென்காசி நிறுவனர் ஆனந்தன் அய்யாசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பெண்கள் கைவினைஞர்கள், புதுமுக தொழில்முனைவோர்கள் பங்கேற்றனர். கொற்றவை தளத்தின் செயல்முறை விளக்கக்காட்சி நடத்தப்பட்டதுடன், இயற்கை உணவுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், அழகு சாதனங்கள், பயனுள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவை எவ்வாறு ஆன்லைனில் விற்பனை செய்யலாம் என்பதும் விளக்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஷோஹோ தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு கூறுகையில்'' 1980 களில் கம்ப்யூட்டர் வந்தபோது வங்கிகள் முடங்கிப் போகும். வேலை வாய்ப்புகள் குறைந்து போகும் என கூறப்பட்டது. ஆனால் கம்ப்யூட்டர்களால் புதிய வேலைவாய்ப்புகள் உருவானது. அதே போல தற்போது ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு திறன் வருவதால் எதிர்பார்ப்புகள் உள்ளன. மனித அறிவுக்கு நிகர் எதுவும் இல்லை . செயற்கை நுண்ணறிவு திறனை இன்னும் சிறப்பாக பயன்படுத்தினால் புதிய முன்னேற்றங்களை அடையலாம்.ஷோஹோ நிறுவனத்தின் மூலம் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறோம். இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்க அதிக அளவில் மின்காந்தங்கள் தேவை உள்ளது. ஜப்பானில் பிளாஸ்டிக் உடன் ஒரு உலோகத்தை வைத்து புதிய மின்காந்தங்களை தயாரிக்கின்றனர். அது தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்ள ஷோஹோ நிறுவனத்தின் குழுவினர் ஜப்பான் செல்ல உள்ளனர். அதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை