மேலும் செய்திகள்
இளைஞர் காங்., ஆர்ப்பாட்டம்
27-Sep-2025
கடையநல்லுார்:தென்காசி மாவட்டம் கடையநல்லுார் நகராட்சி கூட்ட அரங்கில், பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படம் வைக்கப்பட்டது. அதை அகற்றி விட்டனர். படத்தை மீண்டும் வைக்க வலியுறுத்தி, பா.ஜ., சார்பில் கடையநல்லுார் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் மகேஸ்வரி முருகன் தலைமை வகித்தார். நகர மன்ற உறுப்பினர்கள் சங்கரநாராயணன், ரேவதி பாலீஸ்வரர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலர்கள் பாலகுருநாதன், அருட்செல்வன், பாலசீனிவாசன், மாவட்ட பொருளாளர் கோதை மாரியப்பன், மாவட்ட இளைஞரணி தலைவர் விவேக் குமார், மாவட்ட துணைத் தலைவர் தர்மர், மாவட்ட செயலர் ச ரவணன், வழக்கறிஞர் அணி பார்த்தசாரதி, பாலீஸ்வரன் ஆதியோகிர் உள்ளிட்ட பலர் கண்டன கோஷங்களை எழுப்பினர். பின், பா.ஜ., மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி கண்டன உரையாற்றினார். நீதிமன்ற அனுமதியுடன் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
27-Sep-2025