மேலும் செய்திகள்
தம்பிக்கு கத்திக்குத்து; அண்ணனிடம் விசாரணை
25-Nov-2024
மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
16-Dec-2024
தென்காசி:சொத்து தகராறில் அண்ணனின் தலையை துண்டித்து கொலை செய்த தம்பிகளை போலீசார் தேடி வருகின்றனர்.தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே கருத்தபிள்ளையூரை சேர்ந்தவர் அருள். இவருக்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவியின் மகன் சொக்கன் என்ற இருதயராஜ் 47. இளைய மனைவியின் மகன்கள் ஆரோக்கியராஜ், ஜெயபால்.ஆதரியானூர் அருகே அச்சங்குளம், கள்ளத்திகுளங்களில் மீன் பிடிக்க குத்தகைக்கு இருதயராஜ் எடுத்துள்ளார். இதனால் இரவில் அங்கேயே தங்கியிருப்பார்.நேற்று முன்தினம் இரவில் அச்சங்குளம் குளக்கரையில் படுத்திருந்தார். அப்போது அங்கு சென்ற அவரது தம்பிகள் ஆரோக்கியராஜ், ஜெயபால் ஆகியோர் இருதயராஜிடம் சொத்து தொடர்பாக தகராறு செய்தனர். அவரை தலை துண்டித்து கொலை செய்தனர். பின்னர் தப்பி ஓடி விட்டனர்.அருளுக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம், வீடு உள்ளிட்ட சொத்துகள் மூத்த மனைவியின் மகனான இருதயராஜுக்கு தான் சொந்தமானது என அவர் கூறியுள்ளார்.இதனால் இளைய மனைவியின் மகன்கள் தங்களுக்கு சொத்து கிடைக்காமல் போகிறதே என்ற ஆத்திரத்தில் அண்ணனை தலையை துண்டித்து கொலை செய்தது தெரியவந்தது. ஆழ்வார்குறிச்சி போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
25-Nov-2024
16-Dec-2024