உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / நகைக்கடையில் 32 கிராம் தங்கம் அபேஸ் கில்லாடி மூதாட்டி கைது; நகை மீட்பு

நகைக்கடையில் 32 கிராம் தங்கம் அபேஸ் கில்லாடி மூதாட்டி கைது; நகை மீட்பு

தென்காசி:தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகைக்கடையில் 32 கிராம் தங்கநகையை அபேஸ் செய்த மூதாட்டி கைது செய்யப்பட்டார். நகை மீட்கப்பட்டது.கடையநல்லூர் பேட்டை நகைக்கடை பஜாரில் அப்துல் காதர் 70, நகை கடை நடத்தி வருகிறார். ஜூலை 9 மாலை 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நகை வாங்க வந்தார். 32 கிராம் எடையுள்ள தங்க செயினை பார்த்தார். ரூ.மூன்று லட்சம் மதிப்புள்ள அந்த நகைக்கு பணம் கொஞ்சம் குறைவாக உள்ளது.வீட்டில் சென்று எடுத்து வந்து வாங்கிக் கொள்கிறேன் எனக்கூறி அந்த நகையை திருப்பி கொடுத்தார்.மூதாட்டி சென்ற பிறகு நகை கடைக்காரர் அந்த நகையை எடை போட்ட பார்த்த போது அது போலியான கவரிங் நகை என்பது தெரியவந்தது.கடை சிசி டிவியில் பார்த்தபோது மூதாட்டி தங்க நகையை வாங்கி தம் பைக்குள் மறைத்து வைப்பதும் தன் இடுப்பில் இருந்து போலியான கவரிங் நகையை எடுத்து கவரில் வைத்து கடைக்காரரிடம் கொடுக்கும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.விசாரணையில் மூதாட்டி வாசுதேவநல்லூர் அருகே அரியூரைச் சேர்ந்த முருகையா மனைவி திருமலையம்மாள் 70, என தெரிய வந்தது.கடையநல்லூர் போலீசார் அவரை நேற்று கைது செய்து நகையை மீட்டனர்.வயோதிகம் காரணமாக அவரை ஜாமினில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !