உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / 15 ஆண்டுகளாக போராடிய மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

15 ஆண்டுகளாக போராடிய மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

தென்காசி: தென்காசி கலெக்டர் அலுவலகத்தில், மூதாட்டி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம், கீழப்பாவூரைச் சேர்ந்தவர் ராஜசரஸ்வதி, 69. இவரது கணவர் பெயரில் கடையம் அருகே பெரும்பத்து கிராமத்தில், 11.35 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு, 10 கோடி ரூபாய். இந்நிலத்தை மாதாபுரத்தைச் சேர்ந்த பொன்னுத்துரை, கண்ணன், ராஜா அபகரித்து, சட்டத்திற்கு புறம்பாக செங்கல் சூளை அமைத்து, அதற்கு தேவையான மண்ணை தொடர்ந்து எடுத்து பயன்படுத்தி வருவதாக ராஜசரஸ்வதி குற்றம் சாட்டினார். அதை அகற்றுமாறு, 2010 முதல் 15 ஆண்டு களாக, கலெக்டர்களிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதில் விரக்தியடைந்த ராஜசரஸ்வதி, நேற்று கலெக்டர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்தார். மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து, தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை தடுத்து காப்பாற்றினர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ