மேலும் செய்திகள்
பெயர் பலகை: கிராம மக்கள் கோரிக்கை
20-Jun-2025
தென்காசி:தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ஆன்லைனில் ரூ. 2 லட்சம் முதலீடு செய்து திரும்ப வராததால் 4 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்டார்.ஆலங்குளம் சி.எஸ்.ஐ., சர்ச் தெருவைச் சேர்ந்த அருண்பாண்டி மனைவி ஸ்டெல்லா எஸ்தர் 27. இவர்களுக்கு பிரதிக்க்ஷா 5, தேசிகா 4, தர்சிகா 2, ஆகிய மகள்கள், ஜெகதீஸ் என்ற மூன்று மாத ஆண் குழந்தை உள்ளனர். அருண் பாண்டி ஆலங்குளம் காய்கறி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக உள்ளார். ஸ்டெல்லா எஸ்தர் சில மாதங்களாக ஸ்மார்ட் போன் பயன்படுத்தினார். அதில் வாட்ஸ்அப் மூலம் வந்த தகவலில் ஆன்லைன் விளையாட்டு மூலம் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு பணம் முதலீடு செய்தார். துவக்கத்தில் இரட்டிப்பு பணம் அவருக்கு கிடைத்தது. இதையடுத்து எஸ்தர் ஸ்டெல்லா ரூ. 2 லட்சம் வரை முதலீடு செய்தார். ஆனால் பணம் திரும்ப வரவில்லை. இதுகுறித்து அவர் ஆன்லைன் நிறுவனத்தில் நிதி அதிகாரியிடம் பேசி பணத்தை அனுப்ப கெஞ்சினார். ஆனால் பணம் வரவில்லை.மனமுடைந்த ஸ்டெல்லா எஸ்தர் தாய் வீட்டிற்கு சென்று 4 குழந்தைகளை விட்டு விட்டு அருகில் உள்ள மாட்டுத் தொழுவத்தில் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்தார். மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்தார். ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
20-Jun-2025