உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / சக்கரங்கள் துண்டாகி தனியே ஓடியதால் அரசு பஸ் சாலையில் உரசு பஸ் ஆனது பயணிகள் காயம்

சக்கரங்கள் துண்டாகி தனியே ஓடியதால் அரசு பஸ் சாலையில் உரசு பஸ் ஆனது பயணிகள் காயம்

தென்காசி:மதுரையில் இருந்து வந்த அரசு பஸ்சின் ஆக்சில் கடையநல்லுார் அருகே கட் ஆனதால் பின் இரண்டு சக்கரங்கள் ஆக்சிலுடன் ரோட்டில் ஓடின. நிலைகுலைந்த பஸ் ரோட்டில் உரசியபடி சென்று நின்றது. பயணிகள் காயமடைந்தனர்.மதுரையில் இருந்து குற்றாலம் செல்லும் மதுரை கோட்ட அரசு பஸ் நேற்று காலை தென்காசி மாவட்டம் கடையநல்லுார் அருகே இடைகால் என்னும் இடத்தில் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. பஸ்சை வத்திராயிருப்பை சேர்ந்த டிரைவர் சங்கரன் 55, ஓட்டினார். இடைகால் அருகே வந்தபோது திடீரென பஸ்சின் நான்கு சக்கரங்களையும் அடிப்புறமாக இணைக்கும் சென்ட்ரல் ஆக்சில் கட்டானது. இதில் பின் இரண்டு சக்கரங்களும் ஆக்ஸிலுடன் சேர்ந்து பஸ்சை விட்டு கழன்று ரோட்டில் ஓடின. இதனால் பஸ் பின்புற அடிப்பாகம் டயர் இல்லாமல் ரோட்டில் உரசியபடி சிறிது துாரம் சென்றது.பஸ்சில் இருந்த 80க்கும் மேற்பட்ட பயணிகள் தள்ளாடினர். மூன்று மாணவர்கள் காயமடைந்து கடையநல்லுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து ஆய்க்குடி போலீசார் விசாரித்தனர். போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சம்பவத்தின் போது பஸ்க்கு பின்பாக வேறு லாரி, பஸ் போன்ற பெரிய வாகனங்கள் தொடர்ந்து வராததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. அரசு பஸ்கள் சென்ட்ரல் ஆக்சில் கட்டாகி விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து நடக்கிறது. ஏற்கனவே திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே இடைகால் பகுதியிலும் இதே போல ஒரு சம்பவம் நடந்தது. அரசு பஸ் வயலுக்குள் சென்றதில் பெண் பயணி பலியானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை