உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / விஷம் வைத்து மயில்கள் கொலை: விவசாயிக்கு காப்பு

விஷம் வைத்து மயில்கள் கொலை: விவசாயிக்கு காப்பு

தென்காசி: மக்காச்சோள விதைகளில் விஷம் கலந்து வைத்து, 50க்கும் மேற்பட்ட மயில்களை கொலை செய்த விவசாயி கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே குருவிகுளம் பகுதி விவசாயி ஜான்சன், தன் வயலில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தார். மயில்கள் தானியங்களை தின்றதால் ஆத்திரமுற்றார். அவர் மக்காச்சோளம் விதைகளில் பூச்சி மருந்து கலந்து, அவற்றை வயலில் ஆங்காங்கே வைத்துள்ளார். அந்த விதைகளை தின்ற, 50க்கும் மேற்பட்ட மயில்கள் சில நிமிடங்களில் தோட்டம் முழுதும் இறந்து கிடந்தன. தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இறந்த மயில்களின் உடல்களை மீட்டனர். வனச்சட்டத்தின் கீழ் ஜான்சன் கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ