உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / வியாபாரி கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை

வியாபாரி கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை

தென்காசி:தெ ன்காசி மாவட்டம் கடையநல்லுார் அருகே சொக்கம்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன், வியாபாரி. இவரும் கடைய நல்லுார் மாவடிக்காலை சேர்ந்த முருகன், கடையநல்லுார் ஈஸ்வரன், 35, ஆகியோரும் நண்பர்களாக பழகினர். இவர்களில் ஒருவரை ஒருவர் கேலி செய்துள்ளனர். இதில் மூவருக்கும் மோதல் ஏற்பட்டது. கடந்த, 2015 பிப்., 20 மாலையில் மணிகண்டன், கிருஷ்ணாபுரம் பெட்ரோல் பங்க் அருகே மணிகண்டன் சென்ற போது, முருகன், ஈஸ்வரன் மற்றும் வீ.கே.புதுாரைச் சேர்ந்த சுப்பிரமணியன், 29, ஆகியோர் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொன்றனர். கடையநல்லுார் போலீசா ர் மூவரையும் கைது செய்தனர். வழக்கு விசாரணையின் போதே முருகன் இறந்து விட்டார். விசாரணை தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. இதில் ஈஸ்வரன், சுப்பிரமணியனுக்கு ஆயுள் தண்டனையும், தலா 5,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி எஸ். மனோஜ்குமார் நேற்று தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை