உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / இலங்கைக்கு கஞ்சாவை கடத்த முயன்ற 5 பேருக்கு 20 ஆண்டு

இலங்கைக்கு கஞ்சாவை கடத்த முயன்ற 5 பேருக்கு 20 ஆண்டு

தஞ்சாவூர்:நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் கடற்கரை பகுதியில், கடந்த 2020ம் ஆண்டு பிப்., 12ம் தேதி இரவு, கஞ்சா கடத்தப்பட உள்ளதாக மதுரை மண்டல போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் கிராமத்தில், போலீசார் சோதனையிட்டனர்.அப்போது, அவ்வழியே வந்த கன்டெய்னர் லாரியை சோதனை செய்த போது அதில், 661.50 கிலோ கஞ்சாவை 310 பாக்கெட்களில் மறைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக வண்டியில் இருந்த சென்னை திருவொற்றியூரை சேர்ந்த ரமணன், 43, தவமணி, 38, நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த ஐயப்பன், 39, பரமானந்தம், 47, செல்வராஜ், 58, ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். விசாரணையில், ரமணன் மற்றும் தவமணி இருவரும் ஆந்திர மாநிலம் அனகாபல்லியில் இருந்து கடந்த 2020ம் ஆண்டு பிப்., 6ம் தேதி லாரியில் கஞ்சாவை எடுத்து வந்தனர். பின், ஐயப்பன், பரமானந்தம், செல்வராஜ் ஆகியோருடன் இணைந்து நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு படகு வாயிலாக கடத்துவதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது. இவ்வழக்கு தஞ்சாவூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.சுந்தரராஜன் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட ரமணன், தவமணி, ஐயப்பன், பரமானந்தம், செல்வராஜ் ஆகிய ஐந்து பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி