மேலும் செய்திகள்
சிறுமிக்கு தொல்லை டிரைவருக்கு போக்சோ
27-Dec-2025
பைக்குகள் மோதி 2 வாலிபர்கள் பலி
15-Dec-2025
தஞ்சாவூர் : இந்திய உணவுக் கழகம் வாயிலாக நெல், கோதுமை, பருப்பு ஆகியவற்றை அந்தந்த மாநில அரசுகள் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டு ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. அதன்படி, தமிழகத்தில் நுகர்பொருள் வாணிப கழகம் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்து, இந்திய உணவுக் கழகத்தின் வாயிலாக பிற மாநிலங்களுக்கு அனுப்பி வருகிறது. அதே போல் பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் விளையும் கோதுமையை அந்தந்த மாநில அரசுகள் வாயிலாக கொள்முதல் செய்து, பிற மாநிலங்களில் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வினியோகம் செய்து வருகிறது.இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படுகிறது. அதில், ஒரு கிலோ கோதுமையில் சுமார் 200 கிராம் வரை கல், துாசிகள் இருப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: தமிழகத்தில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யும்போது, அதனை இயந்திரம் வாயிலாக சுத்தம் செய்து கொள்முதல் செய்கின்றனர். அதேபோல், இந்திய உணவு கழகம் வாயிலாக கொள்முதல் செய்யப்படும் கோதுமையை முறையாக கொள்முதல் செய்து, ஓரளவுக்கு தரமான கோதுமையை வழங்க இந்திய உணவுக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு தெரிவித்தனர்.
27-Dec-2025
15-Dec-2025