மனைவி கழுத்தறுத்து கொலை தப்பிய கணவனுக்கு வலை
தஞ்சாவூர்:மனைவி கழுத்தை அறுத்து கொலை செய்து தப்பிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.திருவாரூர் மாவட்டம், பருத்திக்கோட்டையை சேர்ந்த புவனேஸ்வரி, 20, ஒரத்தநாடு அருகே கீழவன்னிப்பட்டு பகுதியை சேர்ந்த சபரி, 23, ஆகியோர் காதலித்து ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.அய்யம்பேட்டை அருகே வழுத்துாரில் உள்ள செங்கல் சூளையில் புவனேஸ்வரியின் பெற்றோர் தமிழரசன், ரேவதி வேலை செய்கின்றனர். அங்கேயே தங்கியுள்ளனர். ஒன்றரை மாதங்களாக, புவனேஸ்வரி, சபரி அங்கு தங்கி இருந்தனர்.நேற்று புவனேஸ்வரி அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். சபரி தப்பியோடினார்.அங்கிருந்தவர்கள் புவனேஸ்வரியை தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். அய்யம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, சபரியை தேடி வருகின்றனர்.