மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் திருட்டு
01-Oct-2025
மனைவி தற்கொலையால் கணவரும் விபரீத முடிவு
29-Sep-2025
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
25-Sep-2025
தெருவோரத்தில் தெருநாய் தடுப்பூசி முகாம்
20-Sep-2025
தஞ்சாவூர்:தஞ்சாவூரில் நேற்று மாலை ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. ரயில்வே ஸ்டேஷனில் இரண்டாவது பிளாட்பாரம் நடைமேடையில் உள்ள ரயில்வே ஊழியர்கள் ஓய்வு அறை, ரயில்வே கோர்ட் உள்ள பழமையான கட்டடத்தில் அமைக்கப்பட்டு இருந்த, 100 அடி நீள தகர ஷீட் பெயர்ந்து, இரண்டு மற்றும் முதல் பிளாட்பாரம் இருந்த தண்டவாளத்தில் விழுந்தது. இதனால் ரயில்களுக்கு மின்சாரம் செல்லும், ஒயரும் அறுந்தது.எனினும், இரண்டாவது தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், ரயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், முதல் பிளாட்பாரத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதையடுத்து திருச்சி மார்க்கத்தில் இருந்து வரும் ரயில்கள் நான்காவது பிளாட்பாரம் வழியாகவும், கும்பகோணம், மயிலாடுதுறை மார்க்கத்தில் இருந்து வரும் ரயில்கள், மூன்றாவது பிளாட்பாரத்தின் வழியாகவும் இயக்கப்பட்டன.மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ், செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து தண்டவாளத்தில் விழுந்த தகர ஷீட்களை உடனே ரயில்வே பணியாளர்கள் இரண்டரை மணி நேரத்திற்குப் பின் அகற்றினர். அறுந்த மின்கம்பிகளை சீரமைத்தனர். இந்த விபத்தால், பிளாட்பாரம் மாற்றி, ரயில்களை இயக்கியதால், பயணியர் அவதிக்குள்ளாகினர்.
01-Oct-2025
29-Sep-2025
25-Sep-2025
20-Sep-2025