உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி காதணி விழா நாளில் சோகம்

ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி காதணி விழா நாளில் சோகம்

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், இந்தளூர் கிராமத்தை சேர்ந்த சுந்தர் என்பவர் மகன் சாய்ராம், 14. வேங்கூரில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு நேற்று காதணி விழா நிகழ்ச்சி நடக்க இருந்தது. தன் அண்ணன் முரளியுடன் வீட்டின் அருகே உள்ள கல்லணை கால்வாய் ஆற்றில் குளிக்க சென்றார்.இருவரும் குளித்துக் கொண்டு இருந்த போது, சாய்ராம் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதை கண்டு பதறிய முரளி, அவரை காப்பாற்ற முடியாமல் அலறினார். தகவல் அறிந்து வந்த திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு வீரர்கள், 3 கி.மீ.,யில் இறந்த நிலையில், சாய்ராம் உடலை மீட்டனர். பூதலுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.காதணி விழா நாளில், சிறுவன் இறந்தது, அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை