உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / மும்முனை மின்சாரம் கேட்டு கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம்

மும்முனை மின்சாரம் கேட்டு கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்:காவிரி, டெல்டா மாவட்டங்களில் நெல், கரும்பு, வாழை, பருத்தி, உளுந்து, நிலக்கடலை 2 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசின் எரிசக்தி துறை நாளொன்றுக்கு வேளாண்மைக்கு குறைந்தபட்சம் 14 மணிநேர மும்முனை மின் விநியோகம் தருவதாக சட்டசபையில் அறிவித்திருந்தும், எட்டு மணி நேரம் கூட மும்முனை மின்சாரம் முழுமையாக கிடைப்பது இல்லை.கடும் கோடை வெயில் தாக்கத்தால் பயிர்களுக்கு தேவையான தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் பாதிக்கப்பட்டு கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் நேற்று, தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்க செயலர் சுவாமிமலை விமலநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், 'சீரான மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்; அறிவிப்பின்றி ஏற்படும் மின்தடை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்' என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.விமலநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:மும்முனை மின்சாரம் முறையாக கிடைக்காமல், குறைந்த மின்னழுத்தம் காரணமாக பம்பு செட் அடிக்கடி பழுதாகி, தேவையற்ற பொருளாதாரச் செலவு, ஆள் கூலி செலவும் விவசாயிகளுக்கு ஏற்படுகிறது. இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை