மேலும் செய்திகள்
மனைவி தற்கொலையால் கணவரும் விபரீத முடிவு
29-Sep-2025
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
25-Sep-2025
தெருவோரத்தில் தெருநாய் தடுப்பூசி முகாம்
20-Sep-2025
சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு போக்சோ
19-Sep-2025
தஞ்சாவூர்:தஞ்சாவூர், கூட்டுறவு ஸ்ரீநகர் கோப்ரெட்டிவ் காலனியை சேர்ந்த தினேஷ் பாலுராஜ், 33, இன்ஜினியரிங் பட்டதாரி. சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஜெர்மன், நெதர்லாந்த் ஆகிய நாடுகளில், ஆளில்லா ட்ரோன்கள் தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றியவர். அண்மையில், அவசர சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்து பொருட்களை, ட்ரோனில் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வந்தார்.கடந்த, 2022ம் ஆண்டு, வெளிநாடு வேலைவாய்ப்பை புறந்தள்ளிவிட்டு ஊருக்கு வந்தார். பிறகு இரண்டு ஆண்டுகளாக, 'யாழி ஏரோ ஸ்பேஸ்' என்ற நிறுவனம் ஒன்றை துவங்கினார். அவருக்கு உதவியாக மனைவி அனுகிரஹா இருந்து வருகிறார்.அவசர சிகிச்சைக்காக மருந்து பொருட்களையும், ரத்தம் மற்றும் உடல் உறுப்புகளையும் கொண்டு செல்லும் வகையில் ட்ரோன் வடிவமைத்தார். சொந்த நாட்டு தயாரிப்பில் 3டி பிரின்டிங்கில் கொண்டு வடிவமைக்கப்பட்ட ட்ரோன்களை, சோகோ நிறுவனத்தின் தலைவரும் பத்மஸ்ரீ விருதாளருமான ஸ்ரீதர் வேம்பு பார்வையிட்டு, தினேஷை பாராட்டினார்.தன் நிறுவனத்தின் சார்பில் ட்ரோன்களை வடிவமைக்க, அதற்கான முதலீடுகளை வழங்க முன் வந்துள்ளார்.இது குறித்து தினேஷ் பாலுராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:நான், 12 ஆண்டுகளுக்கும் மேலாக ட்ரோன் தொடர்பான கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு வருகிறேன். ஜெர்மன், நெதர்லாந்து நாடுகளில் மருந்து பொருட்களை விரைவாக கொண்டு செல்ல, ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.இது போல நம் நாட்டிலும் மருந்து பொருட்களை, மருத்துவ சிகிச்சை எளிதில் கிடைக்காத மலைவாழ் கிராமங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு விரைவாக கொண்டு செல்லும் வகையிலும், ட்ரோன் உருவாக்கப்பட்டது.இந்த ட்ரோனில் மருந்து பொருட்களை விரைந்து கொண்டு செல்வதால், மகப்பேறு மரணங்கள், பாம்பு தீண்டுவதால் ஏற்படும் மரணங்கள் உள்ளிட்ட பல உயிரிழப்புகள் தடுக்க முடியும்.இந்த ட்ரோன், மணிக்கு 150 கி.மீ., வேகத்தில் 400 மீட்டர் உயரத்தில் செல்லும், 7 கிலோ வரை உள்ள மருந்து பொருட்களை எளிதில் எடுத்துச் செல்லும். இதன் மொத்த எடை 25 கிலோ. தொடர்ந்து ஒரு மணி நேரம் பறந்து செல்லக்கூடிய வகையில் பேட்டரிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.ட்ரோன் பறக்க தேவையான செயற்கை கோள் மொபைல் ஆப் டவுன்லோடு செய்யப்பட்டு, அங்கீகாரத்தை பெற்றுள்ளேன். வான் வெளியில் பறக்க தடையில்லா சான்று பெற்றுள்ளேன்.தமிழக அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று, என் ட்ரோன் கண்டுபிடிப்பை காட்சிப் படுத்தினேன். அப்போதே அரசு மருத்துவமனைகளுக்கு மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்ல இந்த ட்ரோனுக்கு அனுமதி வழங்க கேட்டேன்.இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. ட்ரோனுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கும் பட்சத்தில், பலருக்கும் வேலைவாய்ப்பை தஞ்சாவூரிலேயே இருந்தவாறு உருவாக்கி தர முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
29-Sep-2025
25-Sep-2025
20-Sep-2025
19-Sep-2025