மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் திருட்டு
01-Oct-2025
மனைவி தற்கொலையால் கணவரும் விபரீத முடிவு
29-Sep-2025
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
25-Sep-2025
தெருவோரத்தில் தெருநாய் தடுப்பூசி முகாம்
20-Sep-2025
கள்ளப்பெரம்பூர்: தஞ்சாவூர் அருகே அதினாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன், 24, ஆண் செவிலியர். இவர், மங்கையற்கரசி என்ற பெண் செவிலியரை காதலிப்பதாக கூறப்படுகிறது. கடந்த 16ம் தேதி இரவு, அந்த பெண்ணுடன், அவரது சொந்த ஊரான அரியலுார் மாவட்டம், திருமானுாருக்கு, தமிழரசன் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.தஞ்சாவூர் - -திருவையாறு பைபாஸ் சாலை எட்டு கரம்பை பகுதியில் சென்ற போது, இரு பைக்குகளில் வந்த ஐந்து பேர், இவர்களிடம் பணம் கேட்டு, கொலை மிரட்டல் விடுத்தனர். 'எங்களிடம் பணம் இல்லை' என இருவரும் கூறினர். அதற்கு, அந்த நபர்கள், 'யாரிடமாவது, கூகுள் -பே செயலி மூலம் பணம் வாங்கி எங்களுக்கு அனுப்புங்கள்' என மிரட்டினர்.பயந்து போன மங்கையற்கரசி, தன் சகோதரிக்கு போன் செய்து, தமிழரசனுக்கு, 3,000 ரூபாய் அனுப்புமாறு கூறினார். பின், அக்கும்பல், அந்த பணத்தை தங்கள் கணக்குக்கு மாற்றிக் கொண்டது. இந்த நுாதன வழிப்பறியை நேற்று முன்தினம் போலீசில் தமிழரசன் புகார் அளித்தார்.கள்ளப்பெரம்பூர் போலீசார், காதலர்களை மிரட்டி பணம் பறித்த, தஞ்சாவூர் வடகால் பகுதியைச் சேர்ந்த பாபு, 24, மணிகண்டன், 27, வல்லரசன், 21, சார்லஸ், 29, ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள விக்கி என்பவரை தேடுகின்றனர்.
01-Oct-2025
29-Sep-2025
25-Sep-2025
20-Sep-2025