உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / கடன் தொல்லையால் தாய் 10 வயது மகள் தற்கொலை 

கடன் தொல்லையால் தாய் 10 வயது மகள் தற்கொலை 

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை கரிக்காடு பகுதியை சேர்ந்தவர் ராமநாதன், 45. இவரது மனைவி காளீஸ்வரி, 35. தம்பதியின் மகள் நிவ்யதர்ஷினி, 10; ஐந்தாம் வகுப்பு மாணவி. டீக்கடை தொழிலில் நஷ்டம் அடைந்து ராமநாதனுக்கு பல லட்சம் ரூபாய் கடன் ஏற்பட்டது. கடன் பிரச்னையால், சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் டீ மாஸ்டராக பணியாற்றி வருகிறார். கடன் வழங்கியவர்கள் நெருக்கடி கொடுக்கவே, கணவன் - மனைவி மன உளைச்சலில் இருந்துள்ளனர். இந்நிலையில், ராமநாதனின் தாய் செல்லம்மாள் காளீஸ்வரியை பார்க்க சென்றபோது, நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்கவில்லை. அக்கம்பக்கத்தினர் ஜன்னலை உடைத்து பார்த்தபோது, காளீஸ்வரி மின்விசிறியில் துாக்கிட்டு இறந்து கிடந்தார். உள்ளே சென்று பார்த்த போது, நிவ்யதர்ஷினி விஷம் அருந்திய நிலையில் இறந்து கிடந்தார். பட்டுக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை