உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / ஒரத்தநாடு கோவில் சிலை அமெரிக்காவில் உள்ளது: பொன்.மாணிக்கவேல் தகவல்

ஒரத்தநாடு கோவில் சிலை அமெரிக்காவில் உள்ளது: பொன்.மாணிக்கவேல் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவிலுக்கு நேற்று வந்த, முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள பழமையான காசி விஸ்வநாதர் கோயிலில் இருந்து, வீணாதர தட்சிணாமூர்த்தியின், 2.5 அடி உயர ஐம்பொன் சிலை, 1997ல் திருடப்பட்டுள்ளது.இந்த சிலை, தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் விற்பனைக்கு உள்ளது. இன்னும் சில மாதங்களில் தனி நபரின் கைக்கு ஏலம் மூலம் செல்ல உள்ளது. இது, தனிப்பட்ட நபரின் கைக்கு சென்று விட்டால், அவர்கள் சிலையை மறைத்து விடுவர். எனவே, தமிழக அரசு, சிலை கடத்தல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, சிலையை மீட்க வேண்டும்.மேலும், இந்த கோவிலின் கருவறையின் பின்புற சுவரில், தேவகோஷ்டம் என அழைக்கப்படும் லிங்கோத்பவர் சிற்பம், 4 அடி உயரம் உள்ளது. இந்த அமைப்பு இருந்தால் மிகவும் தொன்மையான கோவிலாகும். இதை, அறநிலையத்துறை அதிகாரிகள் ஆயில் பெயின்ட் அடித்து மறைத்து விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

MANIMARAN R
ஜூலை 08, 2024 14:34

அவர் அந்த பொறுப்பில் இருக்கும் பொது என்ன செய்தார்


shakti
ஜூலை 08, 2024 14:19

.. வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ??


Mario
ஜூலை 08, 2024 13:28

கொசு தொல்லை


Mettai* Tamil
ஜூலை 08, 2024 16:04

உங்க வீட்ல திருடு போனா கம்பளைண்ட் பண்ண மாட்டீங்களா


Lion Drsekar
ஜூலை 08, 2024 12:16

நாடு எங்கேயோ போய்க்கொண்டு இருக்கிறது பாவம் இவர், ஒரு விதத்தில் இவர் தப்பித்தார் இவர் மிகப்பெரிய பதவி அதுவும் காவல்துறையில் இருந்ததால் ? சிகரெட்டு உடலுக்கு ஊரு விளைவிக்கும் என்ன விலை கொடுத்தாவது வாங்கும் நிலையில் , சிறைச்சாலைகளில் பீடி ஒன்றுக்கே அதிக விலை கொடுத்து வாங்கி அனுபவிக்கும் காலம் யு டியூபில் சிறைக்கைதிகள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளின் எட்டியைப் பார்த்தாலே தெரியும் , மது உடலுக்கு கேடு என்ன இல்லை கொடுத்தாவது வாங்கிக்குடிக்கும் நிலை என்ன சட்டம் கொண்டுவந்தாலும் ஒரு பாட்டிலுக்கு முன்பு வாங்கிய அதே அதிக விலை வாங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள், காவலர்கள் உங்கள் நண்பன் என்று சொல்கிறார்கள் ஆனால் வானங்களை நிறுத்தும்போதே தடுத்தால் நண்பர்கள் , நிறுத்திய பின்பு லாரியைக் கொண்டுவந்து நிறுத்திய வாகனத்தை எடுத்துச்சென்று பைன் போடுவது , யார் ஆண்டாளும் இதே நிலைதான் , இப்படி இருக்க , இது தவறு என்று சொன்னால் யாருமே கேட்க்கத் தயாராக இல்லை, அவரவர்களுக்கு எது எது தேவையோ அவைகள் கிடைக்கும் இடத்தில புற்றீசல்கள் போல் கூட்டமாக கூடி , மகிழ்ந்து , அன்றைக்கு என்ன கிடைத்ததோ அந்த கப்பத்தை பெற்றுக்கொண்டு ஜீவனம் செலுத்தும் காலம், தனி மனிதன் மற்றம் கொண்டுவரவோ அல்லது தேசப்பற்றுடன் நடந்து கொண்டாலோ அவர்களை மனநலம் பாதித்தவர்கள் என்று கூறி அதற்க்கேற்ப எல்லா நிலைகளிலும் காய்களை நகர்த்தும் காலம், சிறுவயது முதல் நான், இன்று தாங்கள், நடுவில் வந்தவர்


S. Narayanan
ஜூலை 08, 2024 12:10

இன்னும் எதை எல்லாம் மறைக்கிறார்கள் தெரிய வில்லை. ஒரு நாள் தமிழ் நாட்டையே முழுங்கி மறைத்து விடுவர்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை