குட்டையில் பிளாஸ்டிக் கழிவு நிறுவனத்திற்கு தடை
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், வெண்டையம்பட்டி கிராமத்தில், சோழா எக்கோ பாலிமர்ஸ் என்ற பிளாஸ்டிக் மறுசுழற்சி நிறுவனம் இயங்குகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியாகும் பிளாஸ்டிக் கழிவுகள், பொது குட்டையில் கலந்து, அந்த நீரை குடித்த 30 கால்நடைகள் இறந்தன.இதையடுத்து, பூதலுார் ஒன்றிய இந்திய கம்யூ., ஒன்றிய செயலர் முகில் தலைமையில் கிராம மக்கள், கடந்த பிப்., 28ம் தேதி, அந்த நிறுவனம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதற்கிடையில், நேற்று முன்தினம் மாலை, தஞ்சாவூர் ஆர்.டி.ஓ., இலக்கியா முன்னிலையில் பேச்சு நடந்தது. இதில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் வாயிலாக நடத்தப்படும் ஆய்வு அறிக்கை வரும் வரை, சோழா எக்கோ பாலிமர்ஸ் நிறுவனத்தின் இயக்கம் நிறுத்தி வைக்கப்படும் என, அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளித்தனர்.