உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக  டெல்டாவில் வெடித்த ஆர்ப்பாட்டம்: முதல்வரின் நிலைப்பாடு என்ன?

தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக  டெல்டாவில் வெடித்த ஆர்ப்பாட்டம்: முதல்வரின் நிலைப்பாடு என்ன?

தஞ்சாவூர்:காவிரி டெல்டா மாவட்டங்களில், இந்தாண்டு மேட்டுர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததாலும், கடந்தாண்டு கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி காவிரியில் தண்ணீர் திறக்காமல், 99 டி.எம்.சி., தண்ணீர் நிலுவையில் உள்ளதாலும் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது.மேலும், ஜூன் மாதத்தில் 9.19 டி.எம்.சி., ஜூலை மாதத்தில் 31.24 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஆனால், 5 டி.எம்.சி., தண்ணீர் தான் வழங்கியுள்ளது. கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில், 85 சதவீதம் தண்ணீர் உள்ளது. இந்நிலையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில், கர்நாடகா அரசு காவிரியில் தினந்தோறும் ஒரு டி.எம்.சி., தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என பரிந்துரை செய்தது.ஆனால் கர்நாடக முதல்வர் சித்தராமையா தண்ணீர் திறக்க முடியாது என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது, டெல்டா விவசாயிகள் மத்தியில் அவர் மீது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக, நேற்று தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கையில் மண் சட்டியை ஏந்தி போராட்டம் நடந்தது.இதில் கர்நாடக அரசு, மாதவாரியான நீர் பங்கீட்டை உடனடியாக கர்நாடக அரசு செயல்படுத்த வேண்டும் அல்லது ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும்.தமிழக முதல்வர் ஸ்டாலின் கர்நாடக அரசிடம் உடனடியாக பேச்சு நடத்தி தண்ணீரை பெற வேண்டும். இல்லை என்றால் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என கோஷமிட்டனர்.விவசாயிகளிடம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிரவீனாகுமாரி பேச்சு நடத்தி, விவசாயிகளிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். அதே போல் தஞ்சாவூரில் ஆத்துப்பாலம் பகுதியில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சார்பில், மாவட்ட செயலர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 16ம் தேதி ரயில் மறியல்:தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநில பொதுச்செயலர் மாசிலாமணி மற்றும் நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரியில் உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி, கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் வரும் 16ம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்கள் முழுதும் ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ