உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / மூதாட்டியை கொன்று நகை திருடி போதையில் மிதந்தவருக்கு காப்பு

மூதாட்டியை கொன்று நகை திருடி போதையில் மிதந்தவருக்கு காப்பு

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே உஞ்சியவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயிராசு, 65. இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். பிள்ளைகள் இல்லாததால் தனியாக வசித்து வந்தார்.கடந்த, 21ம் தேதி ஆயிராசு, 100 நாள் வேலைக்கு சென்று விட்டு, வீட்டிற்கு திரும்பி விட்டார். பின், இரு நாட்களாக அவர் வேலைக்குச் செல்லவில்லை. அவரது வீட்டிற்கு சென்று 100 நாள் வேலைத்திட்ட ஒருங்கிணைப்பாளர் பார்த்த போது, மூதாட்டி வீட்டில் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தார். அவரது தோடு, செயின் மாயமாகி இருந்தது. திருவோணம் போலீசார் விசாரித்தனர். போலீஸ் மோப்ப நாய் சோழா, மூதாட்டி வீட்டின் அருகே உள்ள செல்வராஜ், 60, என்ற கூலித்தொழிலாளி வீட்டிற்கு சென்றது. போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில், மூதாட்டியுடன் ஏற்பட்ட தகராறில், கட்டையாலும், பீர்பாட்டிலாலும் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.பின், மூதாட்டியின் 2.5 சவரன் தோடு, செயினை திருடி, அடகு கடையில் வைத்து விட்டு, இரண்டு நாட்களாக மது குடித்து, எதுவும் தெரியாதது போல வீட்டில் இருந்துள்ளார். அவரிடம் இருந்த அடகு ரசீது வாயிலாக கொலையை உறுதி செய்த திருவோணம் போலீசார், செல்வராஜை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ