வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இதில என்ன வயது ? சிறார் இம்மாதிரி கொடுஞ்செயல்களைச் செய்ய வயது தடையில்லாத போது தண்டனைக்கு ஏன் சிறார் காப்பக வாசம்? மிக கடுமையான தண்டனைகளே குற்றங்களை குறைக்கும்.
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், பாப்பாநாடு பகுதியை சேர்ந்த, 23 வயது இளம்பெண்ணை, கடந்த, 12ம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த கவிதாசன், 25, அவரது நண்பர்கள் திவாகர், 27.பிரவீன், 20, மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய நான்கு பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். கவிதாசன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.இந்நிலையில், இந்த விவகாரத்தில், பாப்பாநாடு வேல்முருகன், 20, அவரது 17 வயது தம்பி ஆகியோருக்கும் தொடர்பு இருந்ததாக போலீசார் விசாரணையில் தெரிந்தது.இதன் படி, ஒரத்தநாடு மகளிர் போலீசார் நேற்று முன்தினம் வேல்முருகன், அவரது தம்பியை கைது செய்து, வேல்முருகனை திருச்சி மத்திய சிறையிலும், அவரது தம்பியை தஞ்சாவூர் சிறார் இல்லத்திலும் அடைத்தனர்.
இதில என்ன வயது ? சிறார் இம்மாதிரி கொடுஞ்செயல்களைச் செய்ய வயது தடையில்லாத போது தண்டனைக்கு ஏன் சிறார் காப்பக வாசம்? மிக கடுமையான தண்டனைகளே குற்றங்களை குறைக்கும்.