உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் திருட்டு

தஞ்சாவூர்: வீட்டின் பூட்டை உடைத்து, 35 சவரன் நகை திருடியவர்களை, போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம், சோழன் மாளிகையை சேர்ந்தவர் பாஸ்கர், 48; ஹோட்டல் மாஸ்டர். திருவையாறில் வசித்த பாஸ்கரின் தந்தை, செப்., 27ல் இறந்து விட்டதால், குடும்பத்துடன் சென்று விட்டு, நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த, 35 சவரன் நகைகள் திருடு போனது தெரிந்தது. பட்டீஸ்வரம் போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை