உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / கணவரால் எச்.ஐ.வி., பாதிப்பு மனைவி புகாரில் 5 பேர் மாயம்

கணவரால் எச்.ஐ.வி., பாதிப்பு மனைவி புகாரில் 5 பேர் மாயம்

மன்னார்குடி:கணவரால், எச்.ஐ.வி., பாதிப்பு ஏற்பட்டதாக, மனைவி புகார் அளித்துள்ளதையடுத்து தலைமறைவான கணவர், உறவினர்களை மன்னார்குடி மகளிர் போலீசார் தேடி வருகின்றனர்.திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்த இளைஞருக்கும், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த, 33 வயது பெண்ணுக்கும் 2020ல் திருமணம் நடந்தது. பெண் கர்ப்பமடைந்தார். பெண்ணை பரிசோதனை செய்த டாக்டர், எச்.ஐ.வி., பாதிப்பு இருப்பதை கண்டறிந்தார்.பெண்ணின் கணவரை பரிசோதனை செய்ததில், அவருக்கும் எச்.ஐ.வி., பாதிப்பு இருப்பது தெரியவந்தது. தம்பதியருக்கு, ௩ வயதில் பெண் குழந்தை உள்ளது. குழந்தைக்கு பாதிப்பு இல்லை.குடும்பத்தினரை விசாரணை செய்ததில், அந்த பெண்ணின் கணவருக்கு, திருமணத்திற்கு முன் எச்.ஐ.வி., இருந்தது தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பெண், மன்னார்குடி மகளிர் போலீசில் ஏப்., 10ல் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதியாததை அடுத்து, பெண் தரப்பில் வழக்கு பதிய வலியுறுத்தினர். கடந்த, 1ம் தேதி, கணவர் உட்பட ஐவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். தலைமறைவான கணவர், உறவினர்கள் நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ