உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / போதை மாத்திரை விற்பனை தஞ்சாவூரில் 7 பேர் சிக்கினர்

போதை மாத்திரை விற்பனை தஞ்சாவூரில் 7 பேர் சிக்கினர்

தஞ்சாவூர்:கல்லுாரி மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை செய்த இளைஞர் உட்பட ஏழு பேரை, போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில், கல்லுாரி மாணவர்க ளுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கிழக்கு போலீசார், கடந்த இரண்டு நாட்களுக்கு முன், போதை மாத்திரை மற்றும் ஊசி விற்பனை செய்த கீழவாசல் பகுதியை சேர்ந்த முகமது அப்பாஸ், 22, பிரவீன், 28, உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், திண்டுக்கல், ஹனுமான் நகரை சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி நவீன்குமார், 33, என்பவர் போதை மாத்திரை சப்ளை செய்தது தெரிந்தது. எஸ் .ஐ., தென்னரசு தலைமையிலான தனிப்படை போலீசார், திண்டுக்கல் சென்று, நவீன்குமாரை கைது செய்து, அவரிடம் இருந்து 600க்கும் மேற்பட்ட போதை மாத்திரை அட்டைகளை பறிமுதல் செய்தனர். அவரை, தஞ்சாவூருக்கு அழைத்து வந்து நடத்திய விசாரணையில், மருந்து விற்பனை பிரதிநிதியாக இருப்பதால், மாத்திரை வாங்குவதற்கான அனுமதியை வைத்து, ஹரியானா மாநிலத்தில் இருந்து வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி, தமிழகம் முழுவதும் குழு அமைத்து சப்ளை செய்தது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ