மேலும் செய்திகள்
'கண்டக்டரை காணோம்' நடுவழியில் நின்ற பஸ்
16-Oct-2024
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து நேற்று முன்தினம் பழனி ஆண்டவர் என்ற தனியார் பஸ், தஞ்சாவூர் வந்து கொண்டிருந்தது. பஸ்சில் கண்டக்டராக அம்மாசத்திரம் பகுதி சதீஷ்குமார், 28, இருந்தார். அவர் அய்யம்பேட்டை பஸ் ஸ்டாப்பில் பயணியரை ஏற்றிக்கொண்டு இருந்தார்.அப்போது, பாபநாசம் அருகே புரசைக்குடியை சேர்ந்த அஜித்குமார், 29, தன் மனைவி, குழந்தையை பஸ்சில் ஏற்றி விட்டார். பின், கண்டக்டரிடம் அவர், 'பஸ்சை சிறிது நேரம் நிறுத்த வேண்டும். நான் வீட்டிற்கு சென்று பைக்கை விட்டுவிட்டு உடனே வந்து விடுகிறேன்' என, கூறியுள்ளார்.இதற்கு, 'அவ்வளவு நேரம் காத்திருக்க முடியாது' என, கண்டக்டர் மறுக்கவே, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பஸ் புறப்பட்டு சென்றது. ஆத்திரமடைந்த அஜித்குமார் தன் நண்பரான குலாம் தஸ்தஹிர், 25, என்பவருடன் பைக்கில் விரட்டி சென்று, வயலுார் பகுதியில் பஸ்சை வழிமறித்து, சதீஷ்குமாரை சரமாரியாக தாக்கினர். சதீஷ்குமார் படுகாயமடைந்து, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தஞ்சாவூர் தாலுகா போலீசார், அஜித்குமார், குலாம் தஸ்தஹிரை நேற்று கைது செய்தனர்.
16-Oct-2024