உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / முதிர்வு தொகை தராத நிறுவனம் ரூ.4.09 கோடி வழங்க உத்தரவு 

முதிர்வு தொகை தராத நிறுவனம் ரூ.4.09 கோடி வழங்க உத்தரவு 

தஞ்சாவூர்:முதிர்வு தொகை தராமல் ஏமாற்றியதால், பாதிக்கப்பட்ட டாக்டர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, 4.09 கோடி ரூபாயை வழங்க, தனியார் நிதி நிறுவனத்தினருக்கு, நுகர்வோர் குறைதீர் ஆணையம் நேற்று உத்தரவிட்டுள்ளது.தஞ்சாவூர், முத்தமிழ் நகரை சேர்ந்தவர் சண்முகநாதன். தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரியில் இருதய நோய் டாக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தன் ஓய்வு பணப்பலன்கள், அசையா சொத்துக்களை விற்ற வகையில் கிடைத்த தொகையை, வங்கியில் முதலீடு செய்திருந்தார்.பட்டுக்கோட்டை திருமலை திருமால் நிதி நிறுவனத்தினர், சண்முகநாதனை அணுகி, ஓராண்டு நிரந்தர முதலீடுகளுக்கு 10.5 சதவீதம் வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறினர். சண்முகநாதன் முதலீடு செய்தார். ஆனால், முதிர்வு தொகையை, நிதி நிறுவனத்தினர் பணத்தை தராமல் இழுத்தடித்தனர்.இது தொடர்பாக, தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், சண்முகநாதன் அவரது குடும்பத்தினர் வழக்குத் தொடர்ந்தனர்.இவ்வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணைய மன்றத் தலைவர் சேகர், உறுப்பினர் வேலுமணி விசாரித்து, சண்முகநாதன் உள்ளிட்டோருக்கு முதிர்வு தொகைகள் 2.96 கோடி ரூபாயும், மன உளைச்சல், வீண் விரையத்துக்காக 1.10 கோடி ரூபாயும், வழக்கு செலவுத் தொகையாக 3.50 லட்சம் ரூபாய் என 4.09 கோடி ரூபாய் வழங்க தனியார் நிதி நிறுவனத்தினருக்கு நேற்று உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை