உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / காங்., மேயருக்கு ஆதரவாக பா.ஜ., நடத்திய போராட்டம்

காங்., மேயருக்கு ஆதரவாக பா.ஜ., நடத்திய போராட்டம்

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில், தி.மு.க., கூட்டணியில் உள்ள 38 தி.மு.க., இரண்டு காங்கிரஸ், மூன்று அ.தி.மு.க., மூன்று சுயேச்சைகள், மார்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கவுன்சிலர்கள் தலா ஒருவர் உள்ளனர்.எனினும், கூட்டணி உடன்பாடு படி, இந்த மாநகராட்சி, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆட்டோ டிரைவர் சரவணன் மேயராகவும், தி.மு.க.,வின் தமிழழகன் துணை மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இந்நிலையில், 'உரிய மரியாதை வழங்கப்படுவதில்லை' என மேயர் சரவணன், மாநகராட்சி வாயிலில் அமர்ந்து, சில நாட்களுக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், மேயருக்கும், தி.மு.க., கவுன்சிலருக்கும் பனிப்போர் நிலவுகிறது.சமீபத்தில் காங்கிரஸ் மேயரை, தி.மு.க., கவுன்சிலர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும், மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து, மேயர் சொல்வதை கேட்கக் கூடாது என கூறியதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், மாநகராட்சி அலுவலகம் முன், பா.ஜ., வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட பா.ஜ.,வினர், போராட்டத்தில் ஈடுபட்டனர். 'தி.மு.க.,வினர் மேயரை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும்' என கோஷமிட்டனர். காங்கிரஸ் மேயருக்கு ஆதரவாக, பா.ஜ.,வினர் நடத்திய போராட்டத்தை பார்த்து, பொதுமக்கள் ஆச்சர்யம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ