உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / கட்சி மாறிய கவுன்சிலர்கள் 2 நாளில் அடித்தனர் யு டர்ன்

கட்சி மாறிய கவுன்சிலர்கள் 2 நாளில் அடித்தனர் யு டர்ன்

தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர்களான குமணன், சுரேஷ், ஜெயராமன், லதா ஆண்ட்ரூஸ் ஆகியோர் அக்., 11ல், தி.மு.க., நகர செயலர் செந்தில்குமார், அவரது மனைவியான நகராட்சி சேர்மன் சண்முகப்பிரியா முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர். இதையடுத்து, கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து குமணனை நீக்குவதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில், தி.மு.க.,வில் இணைந்த ஜெயராமன், லதா ஆண்ட்ரூஸ் ஆகியோர் ஒரே நாளில் மீண்டும் அ.தி.மு.க.,விற்கு திரும்பினர். சேகர் கூறுகையில், ''ஜெயராமன், லதா ஆகியோரை சேர்மன் சண்முகப்ப்ரியா கோவிலுக்கு அழைத்துச்சென்று, தி.மு.க., கரை வேட்டி போர்த்தி தி.மு.க.,வில் இணைந்து விட்டதாக செய்தி பரப்பியுள்ளார். இதை விரும்பாத இருவரும், என்னை சந்தித்து நடந்ததை கூறி, அ.தி.மு.க.,வில் தொடர்வதாக தெரிவித்தனர். குமணன் கட்சியில் நிக்கப்பட்டு விட்டார்,'' என்றார். தி.மு.க., நகர செயலர் செந்தில்குமார் கூறுகையில், ''அவர்கள் விரும்பி தான் வந்தனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ராமகிருஷ்ணன்
அக் 14, 2025 06:03

திமுக கொடுத்த . ரேட் படியவில்லை, அதனால திரும்பி விட்டார்கள். திராவிஷ கும்பல்கள்


முக்கிய வீடியோ